• Dec 18 2025

2026ல் இப்படி தான் இருப்பேன்.! பலரது கவனம் ஈர்க்கும் நடிகை சமந்தாவின் இன்ஸ்டா போட்டோ

Aathira / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இயக்குனர் ராஜ் நிதிமோரு ஆகியோர் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுடைய திருமணம் மிக எளிமையாக  நண்பர்கள், உறவினர்களுடன் மட்டும் நடைபெற்றது. 

இந்த திருமணம் இருவருக்கும் இரண்டாவது திருமணம் ஆக அமைந்துள்ளது. சமந்தா ஏற்கனவே நாக சைதன்யாவை காதலித்து  திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் பெற்று பிரிந்தார். 

அதற்கு பின்பு நாக சைதன்யா  சோபிதா துலிபாலாவை  காதலித்து திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம்  ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில்   நடைபெற்றது. 


அதேபோல இயக்குனர் ராஜ் நிதிமோரு ஏற்கனவே திருமணம் செய்து உள்ளதோடு, அவருக்கு பெண் குழந்தையும் உள்ளது.  ஆனாலும் இவருடைய முதல் திருமணமும் விவாகரத்தில் முடித்துள்ளது. 


இவ்வாறான நிலையிலேயே சமந்தாவும் இயக்குனர் ராஜ் நிதிமோருவும்  திரைப்படம் ஒன்றில் பணியாற்றியபோது காதலித்து  திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

இந்த நிலையில்,  நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட  புகைப்படம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் 226 ஆம் ஆண்டில் நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி  தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.. 

Advertisement

Advertisement