சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று , முத்துவின் நண்பர் வீட்டுக்கு வந்து நிக்கிறார். அவரைப் பார்த்தவுடனே முத்து ரொம்ப சந்தோசப்படுறான். பிறகு முத்து என்னடா திடீரெண்டு வந்து நிக்கிற என்று கேட்டார். அதுக்கு அவர் தன்ர மனைவிட அப்பா காசிக்குப் போனார் அதுதான் பிரசாதம் கொண்டுவந்தேன் என்றார். பிறகு முத்து ரெண்டு பேரையும் சாப்பிட கூட்டிக்கொண்டு போறான்.
அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ரோகிணி வந்து மனோஜ் அவசரமா வெளில போகணும் சாப்பாடு ரெடி பண்ணுங்க என்று சொல்லுறாள். அதுக்கு மீனா கொஞ்ச நேரம் பொறுங்க அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிச்ச பிறகு தாரேன் என்கிறாள். இதைக் கேட்டவுடனே ரோகிணி கோபத்துடன் அங்க இருந்து போறாள்.
இதைத் தொடர்ந்து ரோகிணிட மனோஜ் சாப்பாட கேக்கிறான். அதுக்கு ரோகிணி பொறுங்க முதல் கஸ்டமர் சாப்பிடுறாங்க அவங்க போன பிறகுதான் உனக்கு சாப்பாடு என்கிறாள். இதைக் கேட்டு மனோஜ் கோவத்தில கத்துறான். உடனே வீட்ட இருந்த எல்லாரும் வெளியே வந்து என்ன சத்தமா இருக்கு என்று கேக்கிறார்கள். இதைக் கேட்டவுடனே சாப்பிட்டுக் கொண்டிருந்த முத்துவின் நண்பர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே போறார்.
பிறகு மீனா ரோகிணி இப்படிக் கதைத்ததுக்கு பேசுறாள். இப்படியே எல்லாரும் அடிபட்டுக் கொண்டிருக்கும் போது ஸ்ருதி அம்மா அங்க வந்து நிக்கிறார். இதைப் பார்த்து அவர் ஷாக்காகி நிக்கிறார். பிறகு மீனா முத்துவ அப்படி எல்லாம் கோபப்படாதீங்க என்று சொல்லுறாள். பின் எல்லாத்தயும் மறந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்கச் சொல்லிச் சொல்லுறாள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!