உலக சினிமா வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாகவும், கற்பனை உலகை திரையில் உயிர்ப்பித்த விதத்தாலும் புதிய மைல்கல்லை உருவாக்கிய திரைப்படம் என்றால் அது ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘அவதார்’ தான். 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியான இந்த படம், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

‘அவதார்’ படத்தில் உருவாக்கப்பட்ட பண்டோரா என்ற கற்பனை உலகம், அதற்கு முன்பு யாரும் கண்டிராத வகையில் திரையில் காட்சியளித்தது. 3D தொழில்நுட்பம், VFX, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு என அனைத்திலும் படம் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனைகளை நிகழ்த்தியது.
மேலும், ‘அவதார்’ திரைப்படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்று உலக சினிமாவின் கவனத்தை முழுமையாக தன் பக்கம் திருப்பியது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, அவதார் தொடரின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்தது.

இந்த நிலையில், அவதார் தொடரின் மூன்றாவது பாகமான ‘Avatar: Fire and Ash’ திரைப்படம், நாளை மறுநாள் டிசம்பர் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான டிரெய்லர், டீசர்கள் மற்றும் விளம்பரங்கள் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
‘அவதார் 3’ திரைப்படத்தை இந்தியாவில் புரமோட் செய்யும் வகையில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு ஜேம்ஸ் கேமரூன் ஒரு சிறப்பு வீடியோ நேர்காணல் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த உரையாடலில், ஜேம்ஸ் கேமரூன் ‘அவதார்’ படத்தின் உருவாக்கம், அதன் கற்பனை உலகம், தொழில்நுட்ப சவால்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு குறித்து விரிவாக பேசியுள்ளார். இந்திய ரசிகர்களின் அபார வரவேற்பை நினைவுகூர்ந்த அவர், இந்தியாவை ஒரு முக்கிய சந்தையாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடலின் போது, எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படம் குறித்து ஜேம்ஸ் கேமரூன் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். ராஜமௌலி தற்போது இயக்கத் திட்டமிட்டு வரும் ‘வாரணாசி’ படத்தைப் பற்றியும், அதன் கதை மற்றும் காட்சியமைப்பு குறித்தும் பேசப்பட்டது.
அப்போது, ஜேம்ஸ் கேமரூன் ஜாலியாக, “வாரணாசி படத்தில் புலிகளை வைத்து ஏதேனும் காட்சிகள் படமாக்கப்பட்டால், என்னை கூப்பிடுங்கள்… நான் கண்டிப்பாக வருகிறேன்.நான் நேரில் உங்கள் செட்டிற்கு வருவேன். கமெராவை கொடுங்கள் சில ஷாட்களை எடுத்துத் தருகிறேன்.” என்று கூறினார்.
இந்த வீடியோ வெளியானதும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
JamesCameron: I think you've been shooting for #Varanasi, Your new film🎬#SSRajamouli: We've been shooting for a Year and 8-9 months to finish it⌛#JamesCameron: Call Me. When you're shooting something fun. With tigers😁🐯 pic.twitter.com/xC63kiAeh3
— AmuthaBharathi (@CinemaWithAB) December 17, 2025
Listen News!