• Dec 17 2025

பிரதீப் முன் அழலாமா.. ‘DUDE’ படத்தில் எதற்காக இப்படி செய்தீர்கள்? கேள்வியெழுப்பிய தேவயானி

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நேரங்களில் கதாபாத்திரங்களின் சம்பவங்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளிவந்த ‘DUDE’ திரைப்படம், அதன் கதை மற்றும் நடிகர்களின் நடிப்பால் மக்கள் மனதில் நிலைத்துள்ளது.


‘DUDE’ திரைப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில், பிரதீப் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, கதாபாத்திரத்தின் சவால்கள், உறவுகள் மற்றும் உணர்வுகளை வெளிக்காட்டியிருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு நடித்திருந்தார்.

‘DUDE’ திரைப்படம் 17 அக்டோபர் 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான பிறகு, அதன் கதை மற்றும் நடிகர்களின் நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, நடிகை தேவயானி நடிகர் சரத்குமாரிற்கு போன் எடுத்து," என்ன சரத்குமார் நீங்கள் பிரதீப்பின் கால் பக்கத்தில் உட்கார்ந்து அழுகிறீர்களே? அது எப்படி.?" என்று கேட்டார்.

அதற்கு சரத்குமார்," அது வெறும் கதாபாத்திரம். ஒரு வளர்ந்து வரும் நடிகரின் கால் அருகில் அமர்ந்து அழுவதில் என்ன தவறு இருக்கிறது." என்று பதிலளித்துள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. இந்த விளக்கம், சரத்குமாரின் பணிவு மற்றும் நேர்மையான பண்பினை வெளிப்படுத்துகின்றது. 

Advertisement

Advertisement