தொழில்நுட்ப வளர்ச்சி உலகத்தை வேகமாக மாற்றி வரும் இக்காலத்தில், Artificial Intelligence (AI) மனித வாழ்க்கையை எளிமைப்படுத்தும் ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது. அதே நேரத்தில் இந்த தொழில்நுட்பத்தை தவறான நோக்கத்துடன் பயன்படுத்துவது பெரும் சர்ச்சைகளையும், மன உளைச்சல்களையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது நடிகை ஸ்ரீலீலா வெளியிட்டுள்ள ஒரு உணர்ச்சிபூர்வமான அறிக்கை ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில், நடிகைகள் மற்றும் பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி AI மூலம் உருவாக்கப்படும் போலியான படங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தவறான செயல்களால் பலர் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சூழ்நிலையில், நடிகை ஸ்ரீலீலா தனது வேதனையை வெளிப்படுத்தி, AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை கடுமையாக கண்டித்துள்ளார்.
ஸ்ரீலீலா தனது அறிக்கையில், “AI ஆல் உருவாக்கப்படும் தவறான விஷயங்களை ஆதரிக்க வேண்டாம் என கையெடுத்துக் கும்பிட்டு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். தொழிநுட்பத்தை நல்லதற்கு பயன்படுத்துவதற்கும், தவறான முறையில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. தொழிநுட்பம் வாழ்க்கையை எளிமைப்படுத்தத் தான். சிக்கலாக்க அல்ல.” என்று கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகள், அவரது மனவேதனையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் அவர், “என்னுடைய வேலையில் கவனம் செலுத்தியதால், என்னால் இணையத்தில் நடந்தவற்றை மற்றவர்களின் மூலமே தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இது மிகவும் அருவருப்பாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், சமூக வலைத்தளங்களில் நடைபெறும் தவறான செயல்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
Listen News!