• Dec 17 2025

அஜித் கூட நடிச்சதே அதிர்ஷ்டம் தான்.. போன ஜென்மத்தில கூட பிறந்திருப்பன் போலயே.. ரமேஷ்

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் ரமேஷ் கண்ணா. நீண்ட காலமாக சினிமாவில் பயணித்து வரும் அவர், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவம் கொண்டவர். 


சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிகர் ரமேஷ் கண்ணா, அஜித்துடன் தனக்குள்ள நட்பையும், அவருடன் நடித்த அனுபவங்களையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.


அந்த பேட்டியின் போது ரமேஷ் கண்ணா," அஜித் எனக்கு போன ஜென்மத்தில கூட பிறந்தவனா இருப்பான். விஜய் கூட ஒரு படம் தான் பண்ணேன். ஆனா, அஜித் கூட அமர்க்களம், அட்டகாசம், வில்லன், வரலாறு, விஸ்வாசம்னு தொடர்ந்து எத்தனையோ படம் நடிச்சிருக்கேன். அஜித் கூட நடிச்சதே ஒரு அதிர்ஷ்டம் தான்." எனக் கூறியுள்ளார். 

இந்த படங்கள் அனைத்தும் அஜித் ரசிகர்களிடையே இன்று வரை பேசப்படும் படங்களாக உள்ளன. குறிப்பாக, அஜித்தின் திரைமுகம், ஸ்டைல், கதாபாத்திரங்கள் ஆகியவற்றுடன் ரமேஷ் கண்ணாவின் நடிப்பும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்த பேட்டி, அஜித் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement