• Dec 17 2025

‘மகாசேனா’ படப்பிடிப்பில் யானை, குரங்குடன் விளையாடிய ஸ்ருஷ்டி டாங்கே.!– வைரலான வீடியோ

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் உருவாகிய புதிய படம் தான் ‘மகாசேனா’. இந்த படத்தில் நடிகர் விமல், யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


‘மகாசேனா’ திரைப்படம் தமிழ் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்த படம் பான்-இந்தியா ரசிகர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. வெளியீட்டுக்குப் பிறகு, படம் தனது கதைக்களம், நடிப்பு மற்றும் வித்தியாசமான காட்சிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


இந்த நிலையில், ‘மகாசேனா’ படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான தருணம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, படப்பிடிப்பின் போது யானை மற்றும் குரங்குடன் விளையாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஸ்ருஷ்டி மகிழ்ச்சியாக யானையுடன் பழகுவது, குரங்குடன் விளையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை மற்றும் விலங்குகளுடன் அவர் காட்டிய நெருக்கம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement