தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்ஜெட் மற்றும் சம்பள விவரங்கள் எப்போதும் ரசிகர்களிடையே பேசுபொருளாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள புதிய படம் தொடர்பான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த புதிய படத்தை, ஹிட் படங்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிய வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம், இந்த படத்திற்கும் பெரிய அளவிலான முதலீட்டை செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பிரபல வலைப்பேச்சு பேச்சாளர் பிஸ்மி, சமீபத்தில் வெளியிட்ட கருத்து தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தனது கருத்தில், “வெங்கட் பிரபு இயக்கத்தில், சத்யஜோதி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த புதிய படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 150 கோடி ரூபாய்” என்று தெரிவித்துள்ளார்.

பிஸ்மி மேலும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 45 கோடியையும் , இயக்குநர் வெங்கட் பிரபு 18 கோடியையும் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் 12 கோடியையும் சம்பளமாக பெறவுள்ளதாக கூறியுள்ளார். இந்த சம்பள விவரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயன் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அவரது படங்கள் தமிழில் மட்டுமல்லாமல், பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால், அவரது மார்க்கெட் மதிப்பு உயர்ந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
Listen News!