நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். இவர் படையப்பா , சந்திரமுகி மற்றும் பாட்ஷா போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது கூலி படத்தில் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மா நடிகர் ரஜினிகாந்த் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், “ஸ்லோ மோஷன் காட்சி இல்லாமல், நடிகர் ரஜினியால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாது” என்றார். இது ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராம் கோபால் வர்மா இப்படி கதைப்பது முதல் முறை அல்ல அவர் பல சினிமா பிரபலங்கள் பற்றி கதைத்து அவர்களை சர்ச்சையில் சிக்கவைத்தவர். தற்பொழுது நடிகர் ரஜினியை விமர்சித்து இருக்கின்றார். குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் நடிப்பு மற்றும் அவரது ஸ்டைல் பற்றி விமர்சனம் செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவின் இந்த தாக்குதலை நியாயமாக பார்க்க மறுக்கிறார்கள். “ரஜினியின் மாபெரும் வெற்றிக்கு காரணம் அவரது திறமையும், ரசிகர்களின் அன்பும்” என்று பலரும் வாதிடுகின்றனர். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படம் சூப்பர் ஹிட்டானதுடன், ரூ.600 கோடிக்கு மேல் வசூலும் பெற்றிருந்தது. அந்தவகையில் ரஜினியின் நடிப்பு மீதான விமர்சனங்களை ரசிகர்கள் கடுமையாக கண்டிக்கிறார்கள்.
Listen News!