• Apr 02 2025

’அயலான்’ படத்திற்கு வந்த அதே சிக்கல் ‘சைரன்’ படத்திற்கும்.. இரண்டிலும் சிக்கியது ஒரே ஆள் தான்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடித்தஅயலான்திரைப்படத்திற்கு ஏற்பட்ட அதே சிக்கல் ஜெயம் ரவி நடித்தசைரன்திரைப்படத்திற்கும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்தஅயலான்திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படம் ஒரு சில காரணங்களால் தெலுங்கில் வெளியாகவில்லை என்பதும் ஒரு சில நாட்கள் அல்லது இரண்டு வாரம் கழித்து தெலுங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடைசி வரைஅயலான்தெலுங்கில் வெளியாகவில்லை என்பதும் அதற்குள் இந்த படம் ஓடிடியில் வெளிவந்து விட்டதால் இனி தெலுங்கில் வெளியாக வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்தசைரன்என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பும் தெலுங்கு மாநிலங்களில் வெளியாகவில்லை. கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவரும் தெலுங்கு திரையுலகில் நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் இந்த படம் தெலுங்கில் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படமும் இப்போதைக்கு தெலுங்கில் வெளியாக வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால்அயலான்படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையையும்சைரன்’  படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையையும் பெற்றவர் ஒரே நபர் என்பதுதான் கொடுமை. இரண்டு படங்களின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை வாங்கிவிட்டு இரண்டையுமே வெளியிட முடியாமல் அவர் சிக்கலில் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement