• Nov 22 2024

ராமர் கோவிலுக்கும் போறாரு.. வீரமணி பக்கத்திலயும் உட்கார்ந்திருக்காரு.. ரஜினி குறித்து விமர்சனம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ராமர் கோவிலுக்கு சென்ற போது அவரை பாஜகவின் ஆதரவாளர் என்று விமர்சனம் செய்தனர். அதன் பிறகு அவர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த போதும் அவர் பாஜகவின் அடிமை என்றும் சங்கி என்றும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் திடீரென சசிகலாவின் வீட்டிற்கு அவர் சென்றபோது அவர் அதிமுக ஆதரவாளர் என்று கூறிய  நிலையில் நேற்று அவர் கலைஞர் கருணாநிதி நினைவிட திறப்பு விழாவுக்கு சென்று முதல்வர் மு ஸ்டாலின் மற்றும் கி வீரமணி ஆகியோர்கள் அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவரை விமர்சனம் செய்தவர்கள் வாயை மூடி உள்ளனர்.

பாஜக தலைவர்களை சந்தித்த போது மட்டும் சங்கி என்று ரஜினிகாந்த்தை விமர்சனம் செய்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் கி வீரமணியை சந்தித்த போது அமைதியாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியை பொறுத்தவரை அவருக்கு அனைத்து கட்சிகளிலும் நண்பர்கள் உண்டு என்றும் அவரை எந்த அரசியல்வாதியும் பகைத்துக் கொள்வதில்லை என்றும் ரஜினியை விரும்பியே பல அரசியல்வாதிகள் அழைத்து பேசி வருகின்றனர் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், ஏன் சாமியே இல்லை என்று கூறும் கி வீரமணி உடன் கூட ஆன்மீகவாதியான ரஜினிகாந்த் நட்பாக இருக்கிறார் என்றும் அவருடைய பார்வை எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கிறது, ஆனால் அவரை பற்றிய விமர்சனங்கள் தான் மாறி மாறி வருகிறது என்றும் ரஜினி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பக்கம் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்லும் ரஜினிகாந்த் இன்னொரு பக்கம் ராமர் என்ன இன்ஜினியரா என கேலி செய்த கருணாநிதி நினைவிடத்திற்கும் சென்று உள்ளார் என்பதால் அவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது என்றும் ரஜினி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement