• Nov 12 2025

அப்பா உயிரோடு தான் இருக்காரு..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகள்

Aathira / 23 hours ago

Advertisement

Listen News!

1960ஆம் ஆண்டு வெளியான தில் பி தேரா ஹும் பி தேரே என்ற படத்தின் மூலம்   ஹிந்தி சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தர்மேந்திரா. இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.  இதைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. 

முதலாவது ஆண்டில் இரண்டு படங்களில் நடித்தவர், அடுத்தடுத்த வருடங்களில் நான்கு படம் வரை நடிக்க ஆரம்பித்தார். இவ்வாறு அவருக்கு பல ஹிட் படங்கள்  அமைந்தன. அவற்றில் அமிதாப்பச்சன் - தர்மேந்திரா இணைந்து நடித்த ஷோலே என்ற படம்  முக்கியமானது .

இதுவரையில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள தர்மேந்திரா, தயாரிப்பாளராகவும் வெற்றியை சந்தித்துள்ளார். கிட்டத்தட்ட ஆறு தலைமுறையாக இவர் பாலிவுட்டில் நிலைத்து உள்ளார்.  இவருடைய ரெக்கார்டை  பாலிவுட்டில் உள்ள எந்த நடிகராலும் முறையடிக்க முடியவில்லை. 

இவர் சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் தனக்கென சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.  இவர் எம்பி ஆனாலும் சினிமாவில் அடைந்த உச்சம்போல் அரசியலில் எட்ட முடியவில்லை.  இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  மேலும் இவர் இரண்டாவது   திருமணமும் செய்து கொண்டுள்ளார். 


சமீபத்தில் தர்மேந்திரா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில்,  அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் அவர் மீது ரொம்ப அக்கறையோடு இருந்துள்ளார்கள். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.  இதனால் அவர் கண்டிப்பாக உடல் நலம் தேறுவார் என்று நம்பப்பட்டது. 

இந்த நிலையில், நடிகர் தர்மேந்திரா உயிரிழந்து விட்டதாக பாலிவுட் ஊடகங்கள் தகவல் தெரிவித்தன. எனினும் அவருடைய மகள் அதனை மறுத்து, எனது அப்பா இன்னும் உயிரோடு தான் உள்ளார்.  தயவு செய்து எந்த தவறான தகவல்களையும் பகிர வேண்டாம் என்று ஊடகங்களுக்கு தெரிவித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  தற்போது அவர் மீண்டும் நலமாகி வரவேண்டும் என  ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement