• Oct 08 2024

குக் வித் கோமாளி சீசன் 5ன் அடுத்த ஆங்கர் யார்? வெளியானது புதிய ப்ரோமோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்  ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக பங்கு பற்றியவர் தான்  மணிமேகலை. இந்த சீசனின் ஆரம்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்ட நிலையிலும் புதிய நடுவர்கள், போட்டியாளர்கள், கோமாளிகள் என அதிரடியாக ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது இந்த போட்டியில் பைனலிஸ் தெரிவாகி எடுக்கப்பட்ட நிலையில், பிரியங்கா தான் டைட்டில் வின் பண்ணியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு இடையில் மணிமேகலை இந்த சீசனில் இருந்து வெளியேறி இருந்தார்.

தொடர்ந்து சமூக வலைத்தள பக்கங்களில் மணிமேகலை - பிரியங்கா இருவருக்கும் எதிராகவும் ஆதரவாகவும் பல பிரபல   தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். இது தற்போது வரை பெரிய சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது.


இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5ன் அடுத்த ஆங்கர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ ஒன்றும் வெளியாகி உள்ளது.

அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த ஆங்கர் யார்? அது உங்களுக்கு தெரிந்தவராக இருக்கலாம். நீங்கள் நினைத்துக் கொண்டு இருப்பவர்களாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. எனவே யார் அந்த புதிய ஆங்கர் என்பதை அறிய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காணப்படுகிறார்கள்.

Advertisement