• Jan 18 2025

பிக் பாஸ் ஹோஸ்டில் சரியான வாத்தி யாரு.? உலக நாயகனா? மக்கள் செல்வனா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இதன் எட்டாவது சீசன் தற்போது ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் முதலாவது ஆகவே தயாரிப்பாளர் ரவீந்தர் எலிமினேட் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை முதன்முதலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்ற செய்தி வெளியானதில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. இதுவரை இடம் பெற்ற ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவர் தனக்கு உள்ள படப்பிடிப்புகள் காரணமாக இதிலிருந்து விலகி இருந்தார்.

எனவே கமலஹாசனின் இடத்தை விஜய் சேதுபதி எப்படி நிரப்ப போகின்றார் என்ற கேள்வி பலர் மனதிலும் காணப்பட்டது. ஆனாலும் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக முதல் வாரத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார் விஜய் சேதுபதி. இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போனது.


இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கமலுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான வித்தியாசங்கள் பற்றி சமூக வலைத்தளங்களில்  பகிரப்பட்டு வருகின்றனர்.

அதன்படி கமலுடைய விசாரணையில் ஒருவரை கட்டம் கட்ட முடிவு செய்துவிட்டால் அவரை சிலந்தி வலை பின்னுவது மாதிரி மெல்ல மெல்ல தன் வட்டத்திற்கு இழுத்து வருவார். அதில் வாழைப்பழ ஊசி மாதிரி நையாண்டி ஆன கிண்டல்கள் கலந்திருக்கும். டார்கெட் சரியாக மாட்டியவுடன் ஒரே போடு தான். ஆனால் வலிக்காமல் ஊசி போடுவதில் கமல் ஒரு சிறந்த டாக்டராக காணப்படுகின்றார்.

விஜய் சேதுபதியின் பாணி இதற்கு முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றத.  சுற்றி வளைத்து எல்லாம் பேச மாட்டார். ஏன்பா..தப்பு செஞ்சிட்டியாமே என்று நேரடியாகவே கேள்விகளால் மடக்குகின்றார். சம்பந்தப்பட்டவர்கள் நழுவ முயன்றாலும் மெஷின் கன் போல கேள்விகளை கேட்டு லாஜிக்கில் மடங்குகின்றார். எப்படி போனாலும் கேட்டை சாத்தினால் எப்படித்தான் பதில் சொல்றது என்ற வகையில் போட்டியாளர்களை திகைக்க வைத்துள்ளார்.

Advertisement

Advertisement