• Jan 19 2025

மச்சானுக்காக முத்து செய்த காரியம்..? அள்ளிச் சென்ற பொலிஸார் ! தவிக்கும் மீனா

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜ் கடைக்கு ஏற்கனவே வந்து தனக்கு லெப்டரில் 20 கோடி விழப் போகின்றது அதற்காக சாமான் வேண்டும் என்று சொன்ன நபர் மீண்டும் வந்து தனக்கு 25 கோடி ரூபாய் விழுந்துள்ளது. அதை சொல்லிட்டு போகலாம் என்று தான் வந்தேன். ஆனால் வேறு கடையில் சாமான் எடுத்துவிட்டேன் என்று மனோஜ்க்கு பதிலடி கொடுத்துப் போகின்றார்.

மறுபக்கம் முத்து சரக்கு வாங்கி வந்து நாளைக்கு பிரின்சிபல் முன்னாடி இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று மீனாவுக்கு சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் சத்யாவுக்கு சொல்ல வேண்டாம் என்று சொல்லுகின்றார். அதன்படியே அடுத்த நாள் முத்து மீனாவுடன் குடித்துவிட்டு சண்டை போடுவது போல ரோட்டில் இருந்து சண்டை போட்டுக் கொண்டிருக்க, அந்த வழியால் வந்த பிரின்சிபல் பார்க்கின்றார்.

இதை தொடர்ந்து அந்த இடத்திற்கு சத்யாவும் வந்து முத்து உண்மையாகவே குடித்துவிட்டு மீனாவை அடிக்கின்றார் என நினைத்து பேசுகின்றார். அந்த நேரத்தில் பிரின்ஸ்பல் கூப்பிட்டு நீ சத்யா தானே என்று கதைக்க, அவரும் ஆமாம் குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் அக்காவுக்கு கல்யாணம் கட்டி வைத்தோம் அவருடைய வீட்டிலும் கொடுமைப்படுத்துகின்றார்கள் அதனால் தான் நான் வேலைக்கு சென்று படித்தேன் என தனது நிலையை சொல்லி கதைக்கிறார்.


இதனால் மனம் மாறிய பிரின்ஸ்பல் இப்படியான குடும்பத்தில் நீ படிக்க வேண்டும். கட்டாயம் நாளைல இருந்து கிளாஸ் வா எக்ஸாம் எழுது என்று சொல்கின்றார்.  இதனால் முத்துவும் மீனாவும் சந்தோஷப்படுகிறார்கள். அதே நேரத்தில் பிரின்ஸ்பல் போலீசுக்கு கால் பண்ணி முத்துவை மாட்டி விடுகின்றார்.

இதை அடுத்து அங்கு வந்த போலீஸ் முத்துவை பிடித்து போகின்றார்கள்.. மீனா நடந்தவற்றை சொல்லவும் அவரை வெளியே விட முடியாது என்று சொல்லுகின்றனர். இதனால் மீனா தெரிந்தவர்களிடம் உதவி கேட்கின்றார். இறுதியாக ஸ்ருதியிடம் உதவி கேட்கிறார். இதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement