• Jan 19 2025

பாக்கியாவுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் கோபியின் பலியாடு! சிக்கப்போகும் ஈஸ்வரி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியா டான்ஸ் கம்பெட்டிஷனில் வெற்றி பெறுகின்றார். இதனால் பாக்கியா அவரை கொஞ்சி வாழ்த்து சொல்லுகின்றார். அதேபோல கோபியும் இனியாவுக்கு வாழ்த்துக்களை சொல்கின்றார்.

இதை தொடர்ந்து பாக்கியா ரெஸ்டாரண்டில் பிரியாணிக்கான ஆர்டர்களை எடுத்தது போதும் என செப்க்கு சொல்ல, அவர் இன்னும்  அதிகமாக எடுக்கலாம் என்று சொல்லுகின்றார். ஆனாலும் வேண்டாம் என்று பாக்கியா சொல்லுகின்றார். அத்துடன் பாக்கியாவும் செல்வியும் மல்லிகை சாமான் வாங்க போக, தான் வாங்கி வருவதாக செப் சொல்கின்றார். ஆனாலும் பாக்கியா நான் எல்லாவற்றையும் பார்த்து வாங்குகின்றேன் என்று பல்பு  கொடுக்கிறார்.

பாக்கியாவின் பெயரை கெடுப்பதற்காக செப் முயற்சி செய்த போதும் பாக்கியா அதற்கு இடம் கொடுக்காமல் சமையலில் கவனமாக இருக்கின்றார். இதனால் ஒன்றும் செய்ய முடியாமல் அவர் அங்கிருந்து கிளம்பி விடுகின்றார். அதன் பின்பு அங்கு வந்த பழனிச்சாமி வீட்டைப் பற்றியும் பிரியாணி ஆர்டர் பற்றியும் விசாரிக்கின்றார்.


இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த பாக்கியாவிடம்  ஈஸ்வரி பிரியாணி ஆர்டர் பற்றி விசாரிக்க, நாளைக்கு நீங்கதான் வந்து அடுப்பை பற்ற வைத்து இதை ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லுகின்றார். ஆனாலும் தான் வரவில்லை என்று ஈஸ்வரி சொல்ல, நீங்க என்னை மகளாக நினைத்தால் கட்டாயம் வர வேண்டும் என்று கண்டிஷன் போடுகின்றார்.

இதனால் வேறு வழி இல்லாமல் ஈஸ்வரி வருவதற்கு சம்மதம் தெரிவிக்கின்றார். மறுநாள் காலையில் பாக்யா வந்து எழுப்பவும் நான் வர வேண்டுமா என்று கேட்க, கட்டாயம் வரவேண்டும் என்று சொல்லுகிறார் பாக்கியா. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement