மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, கமல், திரிஷா,நாசர், அபிராமி என பலர் நடித்து வருகின்றனர். படம் எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்திற்கு ஏ .ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவினை தொடர்ந்து படக்குழு பரபரப்பாக புரொமோஷன் வேலைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது படம் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் கமல் சிம்பு இருவரும் மாறி மாறி கழுத்தை பிடித்து நெருக்கி கொள்வது போன்ற காட்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் இது வரை வெளியாகி இருந்த போஸ்டர்களில் இருவரும் நட்பாக இருப்பது போல காட்டப்படுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் பின்னர் மணிரத்னம் இயக்கும் படம் என்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Listen News!