• Jan 19 2025

நாங்கள் உங்களை ரொம்பவும் மிஸ் செய்கின்றோம்- தனது பெற்றோரைநினைவு கூர்ந்த மகேஷ்பாவு- வைரலாகும் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு திரைப்படத்தின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ராஜகுமாருடு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகிய புகாரி, ஒக்கடு ,அத்தடு போன்ற திரைப்படங்கள் நல்ல வசூலைக் கொடுத்தன.

இவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்ததால் தெலுங்கில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். ,வர் கடந்த 2005ம் ஆண்டு லுங்கு நடிகை நர்மதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு கௌதம் என்ற மகனும் சித்தாரா என்ற மகளும் உள்ளனர்.


இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முதல் இவருடைய அம்மாவும் அப்பாவும் உயிரிழந்தனர். எனவே அவர்களின் நினைவாக புகைப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி மகேஷ்பாபு,அது குறித்த புகைப்படத்தையும் பதிவிட்டு பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது,மாமய்யா காரு, நாங்கள் உங்களை இழக்கிறோம், நீங்கள் எப்போதும் எங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் இருப்பீர்கள். உங்கள் ஆன்மா தொடர்ந்து சாந்தியடையட்டும், நீங்கள் எங்களுக்குக் கொடுத்த அதே அன்பையும் அரவணைப்பையும் பரப்புவதன் மூலம் உங்கள் நினைவைப் போற்றுவோம் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement