• Nov 21 2025

எங்க குடும்பத்துலயும் குறை பிரசவ குழந்தையை பார்த்து இருக்கோம்! ரவி மோகன் வேதனை

Aathira / 22 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகின்றார் ரவி மோகன். இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் திரைக்கு வர உள்ளன. 

இந்த நிலையில்,  குறைபிரசவ உலக விழிப்புணர்வு திறன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரவி மோகன், 'குறை பிரசவத்தில் பிறந்தவனே' என்ற வார்த்தையை விளையாட்டாக கூட பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

அதற்கு காரணம்,  எங்களுடைய குடும்பத்திலும் ஒரு குறை பிரசவ குழந்தையை பார்த்து இருக்கின்றோம். நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கு. அவங்களை குறை சொல்றது என்று நிறைய விஷயங்களை நாங்க எங்க பேமிலியில் பார்த்து இருக்கிறோம்.  ஒரு பேச்சுக்கு சொன்னாலும் அது அவர்களை ரொம்பவும் பாதிக்கும்.  


ஆனால் எனக்கு இங்கு வந்த பிறகு இவர்கள் எல்லாரும் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது இது எல்லாம் ஒரு குறையே கிடையாது என்ற விஷயம் புரிந்தது.

எனவே குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதை  தடுக்கும் விதமாக மருத்துவர்கள் கூறும் அறிவுரையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.  குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறந்தால் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் எந்த வார்த்தைகளையும் பயன்படுத்த வேண்டாம். மேலும்   குறை பிரசவத்தில் பிறந்தவனே என்ற வார்த்தையை விளையாட்டாக கூட பயன்படுத்த வேண்டாம் என்று ரவி மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement