கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குநர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா . இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது.
இந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகளும் டயலாக்கும் இன்றளவில் மட்டும் பிரபலமாக உள்ளன. குமுதா ஹேப்பி அண்ணாச்சி என விஜய் சேதுபதி பல மேடைகளில் பேசும் அளவிற்கு இந்த படத்தின் காட்சியும், வசனங்களும் ரசிகர்களுடன் ஒன்றித்து உள்ளன.
இந்த நிலையில், கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாவது பாகத்தில் சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் சேதுபதி நடித்த சுமார் மூஞ்சி குமார் கேரக்டருக்கு சாண்டி பக்காவாக செட்டாவார் என்று கூறப்படுகிறது. தற்போது பல வில்லன் கேரக்டர்களில் நடித்து வரும் சாண்டி, மீண்டும் ஒரு மினி விஜய் சேதுபதி ஆக வளர்ந்து வருகின்றார் என்று வலைப்பேச்சு பிஸ்மியும் பாராட்டி இருந்தார்.

எனவே சாண்டி நடப்பில் உருவாகும் இந்த படம் கோகுலுக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது . சாண்டி மாஸ்டர் இறுதியாக லோகா படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!