மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். எனினும் அந்த குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து, அதில் நான் தான் அப்பா என்பது உறுதியானால் மட்டுமே நான் அந்த குழந்தைக்கான பொறுப்பை என்று மாதம்பட்டி ரங்கராஜ் கண்டிஷன் போட்டிருந்தார்.
ஏற்கனவே ஸ்ருதியை திருமணம் செய்த ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவையும் இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம் ரகசியமாக நடந்தது. அதனை சட்டபூர்வமாக பதிவு செய்யவில்லை. ஒரு கட்டத்தில் ஜாய் கர்ப்பமாக, அவரிடம் இருந்து மெல்ல விலக ஆரம்பித்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.
இதை தொடர்ந்து உஷாரான ஜாய் கிரிஸில்டா, மகளிர் ஆணையத்தை அணுகி தனக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு வேண்டினார். அதன் பின்பு இருவருக்கும் விசாரணை நடத்தப்பட்டது. இதன்போது மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஆஜராகி இருந்தார்.

மேலும் ஸ்ருதியும் தனது கணவருக்கு தான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அத்துடன் ஜாய் கிரிஸில்டாவுக்கு எனது குடும்பத்தை பிரிப்பதும், பணமும் தான் நோக்கம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வராமல் டிமிக்கி கொடுப்பதாக ஜாய் கிரிஸில்டா நக்கலாக ஒரு போஸ்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த போஸ்டில் யாராவது எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜை பார்த்தால் டிஎன்ஏ டெஸ்டுக்கு வர சொல்லுங்கள். இந்த டெஸ்ட் எடுக்க சொல்லி 15 நாட்கள் ஆகிவிட்டன. இப்போ எங்கே தலைமறைவாக இருக்கின்றார். மாதம்பட்டி ரங்கராஜ் உங்களுக்கு தைரியமும் நேர்மையும் இருந்தால் டிஎன்ஏ டெஸ்ட்க்கு வாங்க என்று அதிரடியாக அறிவித்துள்ளார் ஜாய் கிரிஸில்டா.
Listen News!