• Nov 26 2025

விஜய்யின் ‘ஜன நாயகன்’ – ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்திய எடிட்டரின் கருத்து..!

luxshi / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தளபதி என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தயாராகி வரும் நிலையில் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


இப்படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார். இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.


பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 

மேலும், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் ஆகியோர் ஒரு பாடல் காட்சியில் சிறப்பாக தோன்றுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் படத்தின் எடிட்டர் பிரதீப் இ.ராகவ் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

'ஜனநாயகன்' சூப்பராக வந்துள்ளது. இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் விஜயின் மிகப்பெரிய  ட்ரீட் ஆகும் என தெரிவித்தார்.


விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 9ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. 

மேலும் படம் வசூலில் 1,000 கோடி கிளப்பை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

கடைசியாக வெளியான விஜய் படமான ‘தி கோட்’ உலகளவில் 456 கோடி வசூலித்து வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement