• Jan 20 2025

விஜய்யின் 70வது படம் கன்ஃபார்ம்.. வீடியோவை வெளியிட்டு அறிகுறி காட்டிய பிரபல நிறுவனம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படுபவர் தான் நடிகர் விஜய். இன்றைய தினம் தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 32 வருடங்களாக நடித்துவரும் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

2000 களில் துவக்கத்தில் விஜய் நடித்த குஷி திரைப்படம் முதல் கில்லி, பிரியமானவளே, ஷாஜகான், பகவதி என வெற்றிப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வந்தார்.

இவ்வாறு வெற்றி படங்களை கொடுத்து வந்த விஜய், கடந்த சில மாதங்கள் முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றையும் ஆரம்பித்து சிறப்பாக நடாத்தி வருகிறார்.


இன்றைய தினம் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கோட் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியானது. இதில் பவதாரணியின் குரலை ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் பாடவைத்து இருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் 70வது படத்தில் நடிக்கிறாரா? என்ற  சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு காரணம் விஜய்க்கு நெருக்கமான தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் விஜய் அரியணையில் ஏறும் காட்சி இடம் பெற்றுள்ளதோடு ஒரு கடிகாரத்தில் 69 என்கின்ற எண்ணில் இருந்து கடிகாரமுள் 70 தாண்டி செல்வது போலவும் காட்டப்பட்டுள்ளது. இதனால் விஜய் 69வது படத்திற்கு பிறகு 70 வது படத்தில் நடிப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement