• Jun 28 2024

அக்கா பாடவேண்டிய பாட்டு.. ரொம்பவும் எமோஷனலான யுவன்!

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடும் இளைய தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் கோட் திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கள் பாடலை வெளியிட்டு இருந்தார்கள்.

இதில் சினேகாவும் விஜயும் மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த காம்போ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அத்துடன் இந்த பாடலும் மெல்லிய மெலடி இசையில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளதோடு, அண்மையில் இறந்து போன பவதாரணியின் குரலை தொழில்நுட்பத்தின் ஊடாக இதில் பயன்படுத்தி இருந்தார்கள்.


இந்த நிலையில், பவதாரணியின் குரலை இப்படி பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்ததில்லை என யுவன் சங்கர் ராஜா எமோஷனலாக தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், கோட் படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடல் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன ஒன்று. இந்த பாடலை கம்போஸ் செய்யும் போது நானும் வெங்கட் பிரபுவும், இது தங்கைக்கான பாடல் என உணர்ந்தோம்.

அவள் மருத்துவமனையில் இருந்து வந்ததும் பாட வைத்து பதிவு செய்யலாம் என நினைத்தோம். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அவரின் குரலை இப்படி பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்ததில்லை. இந்தப் பாடல் உருவாக காரணமான அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் .

Advertisement

Advertisement