• Jan 19 2025

ரோகிணி போட்ட மேக்கப்பில் ஜொலித்த விஜயா குடும்பம்! கடைசியில் நடந்த டுவிஸ்ட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  ரோகினி ஸ்ருதி மீனாவிடம் பார்ட்டியில் நடிப்பதற்காக சொல்லிக் கொண்டிருக்கின்றார். முதலில் மீனாவும் ஸ்ருதியும் மறுப்பு தெரிவிக்க அதற்குப் பிறகு முத்துவும் ரவியும் சம்மதித்து விட்டார்கள் என்று சொன்னதும் அவர்களும் ஓகே சொல்லுகின்றார்கள்.

இதைத்தொடர்ந்து முத்துவிடம் மீனா 50 காருக்கு நீங்க ஓனரா? என்று நக்கல் அடிக்கின்றார். அவரும் 50 கார் ஓனரின் பொண்டாட்டியா? என்று நக்கல் அடிக்கின்றார். இருந்தாலும் மனோஜூம் ரோகிணியும் பொய் சொன்னது பிடிக்கவில்லை ஆனாலும் வீட்டுக்காக என்று சொல்கிறார்கள் என்று சொல்லி சமாதானம் ஆகின்றார்கள்.

அடுத்த நாள் ரோகினி விஜயாவுக்கு பண்ணிய மேக்கப்பில் மிகவும் அழகாக இருக்கின்றார். இதை பார்த்து அண்ணாமலையே ஜொள்ளு விடுகின்றார். அதன் பின்பு ஒவ்வொருவராக வர, எல்லாரும் அவங்களுடைய அழகை பார்த்து மெய் சிலுக்கின்றார்கள்.


ஆனாலும் முத்து மீனாவை காணவில்லை என்று சொன்னதும் விஜயா அவர்கள் இங்கு வருவதற்கு வெட்கப்பட்டு விட்டு ஓடி விட்டார்கள் என்று நக்கல் அடிக்கின்றார். ஆனால் முத்துமும் மீனாவும் வரும்போது எல்லாரும் அவர்களை பார்த்து கண் வைக்கின்றார்கள்.

முத்து மீனாவை வளைத்து வளைத்து  ஃபோட்டோ எடுக்கின்றார். ஒரு கட்டத்தில் மனோஜ் செல்லும்போது முத்துவின் போனை தட்டி விடுகின்றார். இதை பார்த்த வித்யா பதறிப்போய் போனுக்கு என்ன ஆச்சு என்று கேட்க, ஒன்றுமில்லை என்று சொல்லுகின்றார் முத்து. ரோகிணியும் தான் போட்டோ எடுத்து தருவதாக சொல்ல வேண்டாம் நாங்கள் எடுக்கின்றோம் என்று முத்து சென்று விடுகின்றார் இதுதான் இன்றைய எபிசோடு.

Advertisement

Advertisement