• Jan 19 2025

ரோகிணியை விரட்டி விரட்டி வேலை வாங்கிய விஜயா!மனோஜ்க்கு கிடைத்த தண்டனை! முத்துக்கு குஷி தான்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ரோகிணி தான் சமைத்து சாப்பிட வேண்டும் அப்பதான் பரிகாரம் எல்லாம் பலிக்கும் என்று முத்து சொன்னதும் அதுவும் சரிதான் என்று ரோகிணியை பாத்திரம் கழுவ வைத்து சமையல் செய்ய வைத்து வேலை வாங்கி கவனிக்கிறார் விஜயா.

மறுநாள் காலையில் மீனா கோலம் போடவும் வேண்டாம் என தடுத்துவிட்ட விஜயா, தூங்கிக் கொண்டிருந்த ரோகினியை எழுப்பி கோலம் போடுவதற்காக அழைத்து வருகிறார். ஆனால் எனக்கு கோலம் போடத் தெரியாது என்று சொல்ல, போடத்தான் வேண்டும் என்று அவரை போட வைக்கிறார். அங்கிருந்த முத்து போய் பொண்டாட்டிக்கு ஹெல்ப் பண்ணு என மனோஜ் இடம் சொல்ல, அவரும் கோலத்தைப் போல தெரியாமல் போடுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து மீனா அனைவருக்கும் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருக்க பூரி நல்லா இருக்குது என்று ரவியும் ஸ்ருதியும் பாராட்டுகிறார்கள். மேலும் நீங்க செப் ஆனீங்கன்னா நல்லா சம்பாதிப்பீங்க என ஸ்ருதி மீனாவுடன் பேசிக்கொண்டு இருக்க,  அங்கு வந்த விஜயா யார் சம்பாதிப்பாங்க? எனக் கேட்க, அதற்கு ஸ்ருதி மீனாதான்.  நல்லா சமைக்கிறாங்க அதனால நல்லா சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார்.


அதற்கு விஜயா, ஏன் வீடு வீடா பூ கட்டிக் கொடுக்கிறது கானதா வீடு வீடா சாப்பாடு கொடுக்க வேண்டுமா என்று சொல்ல, அதுவும் நல்லா ஐடியா தான். இப்ப அப்படித்தானே நடக்குது என்று ஸ்ருதி சொல்ல, பேசாம இரும்மா அப்புறம் அதுக்கு வேற அவன்ட புருஷன் ஒரு பைக்க வாங்கி கொடுப்பான் என விஜயா சொல்லுகிறார்.

அதன்பின் அங்கு ரோகினியும் மனோஜூம் சாப்பிட வர, அங்கு வந்த முத்து இந்த பாலரம்மா சாப்பிட இருக்குது, விரதம் தானே இருக்கணும். பிறகு மலேசியா சம்மந்தி ஜெயில இருந்து வரமாட்டார் என்று சொல்ல, விஜயாவும் உடனே நானும் மறந்தே போயிட்டன் என ரோகிணியை எழுப்புகிறார். அதன் பிறகு பொண்டாட்டி சாப்பிடலாட்டி நீ சாப்பிடுவியா என்று மனோஜையும் சாப்பிட விடாமல் பண்ணுகிறார்.

இறுதியாக மனோஜ் சாப்பிடாமல் இருக்க ரோகிணி அவரைக் கூட்டிக்கொண்டு வெளியே கிளம்புகிறார். முத்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ஜீவா அவருக்கு கால் பண்ணி வருமாறு சொல்கிறார். 

முத்துவும் சாப்பிட்ட அரைவாசியில் அவசர அவசரமாக அவரை பிக்கப் பண்ண சொல்லுகிறார். அதன் பின்பு ஜீவா மனோஜும்  ரோகிணியும் விசாரித்த ஏஜென்டிடம் செல்கிறார். அங்கு போனதும் அங்கு இருந்த ஏஜென்ட் உங்கள இரண்டு பேர் விசாரிச்சாங்க, என்று உண்மையை சொல்லுகிறார். அது யார் என்று கேட்க, மனோஜ் என்று சொல்ல ஜீவா அதிர்ச்சி அடைகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement