• Dec 04 2024

அரசியலுக்கு வந்ததும் வேலையை காட்டிய விஜய்.. எல்லாரையும் போல அதையும் செய்ய போறாராம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புகழில் உச்சியில் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் அரசியலில் களம் புகுந்துள்ளார். ஒரு அரசியல்வாதியாக சமீபத்தில் தளபதி விஜய் நடத்திய மாநாடு பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது. ஆனாலும் பல சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி சின்னம் ஆகியவற்றை அறிமுகப்படுத்திய விஜய் அதிலிருந்து எந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தாமல் இருந்தார். வெறும் அறிக்கை மூலமாகவே தனது தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இதனால் இப்படிப்பட்ட விஜய் எப்படி சரிபடுவார் என்று விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே மாநாட்டில் ஆக்ரோஷமாக பேசி பலரின் வாயையும் அடைத்து இருந்தார்.

d_i_a

மாநாடு முடிந்ததும் வழக்கம் போல பல கட்சித் தலைவர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். அதிலும் சீமான் விஜயை கடுமையாக விளாசி இருந்தார். ஆரம்பத்தில் தம்பி தம்பி என பாச மழை பொழிந்த சீமான் மாநாட்டிற்கு பிறகு தம்பியா இருந்தாலும் பெத்த தகப்பனாக இருந்தாலும் எதிரி எதிரி தான் என ஆவேசமாக பேசியிருந்தார்.


இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வந்ததும் தனியாக ஒரு சேனலை ஆரம்பிப்பாரா என்ற கேள்வி இருந்தது. அதன்படியே விஜய் கூடிய விரைவில் சேனல் ஒன்றை ஆரம்பிக்க உள்ளாராம்.

மாநாட்டிற்கு பிறகு முதலாவது கட்சி பொதுக் குழு கூட்டத்தை இன்றைய தினம் விஜய் தனது நிர்வாகிகளுடன் நடத்தி வரும் நிலையில், புதிய சேனலை தொடங்கும் முயற்சி இருப்பதாக தனது நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement