சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் கோட் சூட் போட்டு ஆஃபீஸுக்கு கிளம்ப, அண்ணாமலை அவருக்கு அட்வைஸ் பண்ணுகின்றார். ஆனாலும் விஜயா மனோஜ் பண்ணுவதெல்லாம் சரி என்று அவருடைய பக்கம் நிற்கின்றார்.
இதனால் மனோஜ் கிளம்பி போன பிறகு விஜயாவிடம் பேசிய அண்ணாமலை, மனோஜ் செய்யும் தப்புக்கு எல்லாம் துணை போகாதே.. அவங்க பிழை விட்டால் அதை எடுத்துக் கூற வேண்டும்.. இல்லை என்றால் அது எங்களுடைய குடும்பத்தை பாதிக்கும் என்று சொல்ல, இதனை மீனா கேட்டு வருத்தம் அடைகின்றார்.
அதன் பின்பு பூ ஆர்டர் கொடுக்கச் சென்ற மீனா, அங்கு கேட்ட பூவிற்கு பதிலாக வேற பூவை கொடுத்து விடுகின்றார். இதனால் என்ன நடந்தது என்று அவருடைய நண்பிகள் விசாரிக்க, ஒன்றும் நடக்கவில்லை என்று அங்கு இருந்து செல்கின்றார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த முத்துவிடம், நீங்க மீனா கூட சண்டை போட்டிங்களா? மீனா ஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து ஒரு மாதிரி தான் இருக்கின்றார் என்று அவருடைய நண்பிகள் முத்துவிடம் கேட்க, நானும் அதைப் பற்றி விசாரிக்க தான் உங்களிடம் வந்தேன் என்று முத்து சொல்லுகின்றார்.
இன்னொரு பக்கம் மனோஜ் தன்னுடைய புதிய பிராஞ்சுக்கு பி.ஏ இன்டர்வியூ பண்ணுகின்றார். அதில் ஜீவா என்ற பெண்ணை பி ஏவாக அப்பாயின்மென்ட் பண்ணுகிறார்.
இதன் போது எதற்காக அவசரப்படுகின்றாய் என்று ரோகிணி கேட்க, எங்களுக்கு பிஏ ஒருவர் வேண்டும் தானே.. நாங்கள் கோடீஸ்வரராக போகிறோம். நீயும் ஹாஸ்பிடல் செக்அப் என்று பிசியாக இருப்பாய் என்று தனது கனவுகளை அடுக்கிச் செல்கின்றார்.
இதனால் ரோகிணி மனதிற்குள், நானே எப்போது மீனா உண்மையை சொல்ல போகின்றார் என்ற பயத்தில் இருக்கின்றேன் என்று பேசிக்கொள்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!