இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், சமீபத்தில் துபாயில் நடைபெற்ற Dubai Watch Week நிகழ்வில் பங்கேற்ற போது கூறிய ஒரு கருத்து தற்போது இணையத்தை முற்றாக கவர்ந்துள்ளது. “தமிழ் உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று” என்ற அவரது வாக்கியம், உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்களின் பெருமையை மீண்டும் ஒரு முறை வெளிக்கொணர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Dubai Watch Week நிகழ்வில் பங்கேற்றிருந்த தனுஷ், நிகழ்ச்சியின் போது தமிழைப் பற்றிப் பெருமையுடன் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, “நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று.” எனக் கூறியுள்ளார்.
இந்த ஒரு வாக்கியம் தமிழ் ரசிகர்களுக்குப் பெருமையைத் தருவதோடு மட்டுமல்லாமல், மொழியின் பெருமை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனுஷின் இந்தக் கருத்து நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே சமூக ஊடகங்களில் பரவி, ஆயிரக்கணக்கான பகிர்வுகளைப் பெற்றுள்ளது. தமிழர்களும் இந்தக் கருத்தை பெருமிதத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!