சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த சீசன் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. தற்போது வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இதனிடையே வீகென்ட் எபிசோட்டில் போட்டியாளர்களை கடுமையாக வறுத்தெடுத்து இருந்தார் விஜய் சேதுபதி.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு 46 வது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் வழக்கம் போல பார்வதி தன்னுடைய வேலையை காட்டியுள்ளார். அதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
அதன்படி, கிச்சின் டீமில் உள்ளவர்களுக்கு சரியான மார்க் கிடைக்கவில்லை என்பதனால் லிமிட் ஆக சமைப்போம் என்று பிளான் போடுகின்றார்கள். ஆனால் கனி அதை மீறி சிக்கன் செய்து கொடுக்கின்றார்.
மேலும் இதுதான் கேம்.. அவங்க என்ன கேட்டாலும் செஞ்சு கொடுக்கணும்.. நான் செஞ்சி கொடுப்பேன் என்று கனி சொல்லுகின்றார். எனினும் திவ்யா, பார்வதி மற்றும் சாண்ட்ரா ஆகியோர் இல்லை அப்படி பண்ணக்கூடாது என்று சொல்லி வாக்குவாதம் நீடிக்க, கனி கிச்சன் டீமில் இருந்து விலகி கோபமாக வெளியே செல்லுகின்றார்.

இதை பார்த்து பார்வதியும் சாண்ட்ராவும் கைதட்டி சந்தோஷம் அடைகின்றார்கள். மேலும் இவங்க மட்டும் நல்ல பெயர் வாங்கணும் என்று பார்க்கிறார்.. நாம் வேண்டாம் என்று சொன்னாலும் இவங்க சமைச்சு நல்ல பெயர் வாங்க பார்க்கிறாங்க என்று பார்வதி சொல்லுகின்றார்.
அதே நேரத்தில் எப்ஜே , உங்க அண்ணன் போனதில் இருந்து ஆளில்லை என்று யாருடையாவது காலை பிடித்து சப்போர்ட் தேடிகிட்டு இருக்க என்று பார்வதியை பார்த்து சொல்லுகின்றார்.
இதைக் கேட்ட பார்வதி, இப்போதுதான் வெடல பையன் எப்ஜே வெளியே வாரான் என்று நக்கலாக சொல்ல, பாரு ஆண்டி .. பாரு ஆண்டி.. என்று பதிலுக்கு எப்ஜே கிண்டல் செய்கிறார்.
Listen News!