ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் 300 கோடிகளை கடந்து சாதனை படைத்திருந்தது.
மறைந்த தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. அதில் மேஜர் முகுந்த் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்ததோடு மட்டுமில்லாமல் வாழ்ந்தே காட்டி உள்ளார். அதில் அவருடைய மனைவியாக நடித்த சாய் பல்லவியும் பார்ப்பவர்களை எமோஷனல் ரீதியாக ஈர்த்திருந்தார்.

இந்த நிலையில், அமரன் கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் 'சிறந்த பிறமொழி திரைப்படம்' என்ற விருதை வென்றது. மேலும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்கம் மயில் விருதுக்கு அமரன் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. இவருடைய நடிப்பில் அடுத்ததாக பராசக்தி திரைப்படம் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!