பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இறுதியாக திவாகர் வெளியேறினார். எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் சமூக வலைத்தள போட்டியாளர்கள் அதிகம் கலந்து கொண்டார்கள். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அகோரி கலையரசன், மற்றும் அரோரா ஆகியோர் சமூக ஊடகங்களின் ஊடாக பிரபலமானவர்கள். இவர்களை இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்தது பற்றி பல எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யுமாறு போராட்டமும் நடைபெற்றது.
எனினும் திவாகர் மீது இருந்த நெகடிவ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு பொசிட்டிவாக மாறியது. ஆனாலும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை திவாகர். நாளடைவில் அவருடைய வார்த்தை பிரயோகம், செயற்பாடுகள் ரசிகர்களை வெறுப்படையச் செய்தது .

மேலும் விஜய் சேதுபதி சொல்லியும் கேட்டாமல் கேமரா முன்னாடி இருந்து நடிப்பதை தொடர்ச்சியாக செய்தார். ஒரு கட்டத்தில் கேமரா தன் முகத்தையும் திருப்பியது. இதனால் கடுப்பான திவாகர் அங்கிருந்து சென்றார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திவாகருக்கு ஒரு நாளைக்கு 12,000 படி 42 நாட்களுக்கு மொத்தமாக 5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. எனினும் இந்த சம்பளம் மிகவும் குறைவு என பேட்டி ஒன்றில் திவாகர் தெரிவித்துள்ளார்.
Listen News!