தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள பான் இந்தியா படம் ‘மூன்வாக்’ குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த பிரம்மாண்டமான படத்துக்கு, உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பாக அமைந்துள்ளது, இந்தியாவின் நம்பிக்கையான நடனக் கலைஞரும் நடிகருமான பிரபுதேவா, இசை உலகின் ஆஸ்கார் கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இருவரும் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருப்பது தான்.
இருவரும் முன்னர் இணைந்து நடித்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களது கூட்டணியில் வரும் ‘மூன்வாக்’ படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில், யோகி பாபு, அஜூ வர்கீஸ், அர்ஜூன் அசோகன், நிஷ்மா செங்கப்பா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், பிரபுதேவா நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள "Strom" பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாடல் வெளியாகி சில நிமிடங்களிலேயே அதிகளவான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.
b
Listen News!