தமிழ் சினிமாவிலும், சமூக கருத்துகளிலும் தன்னுடைய தைரியமான பேச்சால் எப்போதும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் நடிகர் மன்சூர் அலிகான், இந்த முறை நடிகர் விஜய்யின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய சில வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது,அவரின் அர்ப்பணிப்பு போன்ற விஷயங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.
அதாவது, " என்னுடைய போராட்டம், பிரச்சாரத்தில் எல்லாம் என் கால் தடம் தெருவில பதியும்... விஜய் மாதிரி அப்புடியே வானத்திலயே சுத்திகிட்டு இருக்க மாட்டேன். "ரஞ்சிதமே உதடு வலிக்க கெஞ்சணுமே.." என்று முட்டி வலிக்க எல்லா வேலையும் செய்திட்டு வாறாரு.. அதனால மக்களுக்காக பாடுபட நடந்து போன முட்டியெல்லாம் வலிக்கும் இல்லையா.." என்று கூறியிருந்தார் மன்சூர் அலிகான்.
நடிகர் விஜய் அரசியலுக்கு களமிறங்கிய சில மாதங்களே ஆன நிலையில் தற்பொழுது இந்தக் கருத்து விஜய் ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
Listen News!