• Jan 18 2025

சமந்தாவை வேணுமென்றே சீண்டிப் பார்க்கும் சோபிதா.. செய்யாறு பாலா உடைத்த உண்மை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் இறுதியாக குஷி திரைப்படம் வெளியானது. தனக்கு தனிப்பட்ட ரீதியில் இருக்கும் பிரச்சனைகள், உடல்நல பிரச்சனைகள் என அத்தனையும் தாண்டி இந்த படத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து படங்களில் குட்டி பிரேக் எடுத்து இருந்தார். அதற்கு காரணம் அவரது உடல்நிலை பிரச்சினை என்று சொல்லப்பட்டது. ஆனாலும் சமந்தா அது தொடர்பில் வாய் திறக்காமல் இருந்தார்.

இப்படி இருக்க இப்போது அவர் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியாகி சக்கைப்போடு போட்ட வெப் சீரிஸை இந்தியாவில் ரீமேக் செய்திருக்கிறார்கள். இந்த படம் நவம்பர் 7ஆம் தேதி தேதி சிட்டாடல் வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. 

d_i_a

இந்த நிலையில், சமந்தா - சோபிதா துலிபாலா பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலா கூறிய விஷயங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. அதன்படி அவர் கூறுகையில், தனக்கு இரண்டாவது திருமணத்தில் விருப்பம் இல்லை என்று ஒரு சில நாட்களுக்கு முன்பே சமந்தா தெரிவித்திருந்தார்.


இதற்கு இடையில் நாக சைதன்யா சமந்தா காதலை சொன்ன அதே  தினத்தில் தான் சோபிதாவை நிச்சயதார்த்தம் செய்தார். சோபிதா தன்னை ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்கின்றார் . அவரது முப்பாட்டங்கள் எல்லாம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.

அவர் சமந்தாவை எப்படி வெறுப்பேற்ற முடியுமோ அதனை சோபிதா செய்து வருகின்றார். சமந்தா நாயாக பிறக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். அவரது தங்கை பெயரும் சமந்தாதான். ஆனால் நடிகை சமந்தாவை வெறுப்பேற்ற தான் அவர் இவ்வாறு செய்து வருகின்றார் என செய்யாறு பாலா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement