• Nov 05 2024

வெறும் மூன்று நாட்களில் 100 கோடியை அடித்து நொறுக்கிய படங்களின் பட்டியல் இதோ..

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்களில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இவர்களது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் சாதனை படைத்து விடும்.

இந்த நிலையில், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெறும் மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய் சாதனை படைத்த படங்களின் பட்டியல் விபரம் வெளியாகி உள்ளது. அவை பற்றி விரிவாக பார்ப்போம்.

அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கமலஹாசனுக்கு மிகச்சிறந்த கம்பேக் படமாக இருந்தது. இந்தப் படத்தில் பகத் பாஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.

d_i_a

இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் உலக அளவில் 500 கோடி ரூபாய் வரை வசூலித்து இருந்தது. இதில் கிடைத்த வெற்றியை கொண்டாடும் வகையில் கமலஹாசன் படக்குழுவினருக்கு கார், போன் என வாங்கி கொடுத்து மகிழ்ந்திருந்தார். இந்த படம் முதல் மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


அதேபோல நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் முதல் மூன்று நாட்களுக்குள் 100 கோடியை அசால்டாக அள்ளியது. இந்த படமும் கிட்டத்தட்ட 650 கோடி வரை வசூலித்து சாதனை படைத்திருந்தது.

இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் மூன்று நாட்களுக்குள் 100 கோடி ரூபாயை வாரிக் குவித்திருந்தது. இந்த படமும் மொத்தமாக 600 கோடிக்களை கடந்து சாதனை படைத்து இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படமும் முதல் மூன்று நாட்களுக்குள் நூறு கோடி ரூபாயை வசூலித்த திரைப்படமாக இந்த பட்டியலில் சேர்ந்து உள்ளது. 

தற்போது அமரன் படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் தியேட்டர்களில் ரசிகர்கள் அலைமோதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement