• Nov 21 2025

நடிகராக அறிமுகமாகும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர்.! எந்தப் படத்தில் தெரியுமா.?

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை துல்லியமாகவும் வலுவான கதாபாத்திரங்களுடன் இணைக்கும் படைப்பாளர்களில் முக்கியமான பெயராக விளங்குபவர் இயக்குநர் தயாள் பத்மநாபன். தனது படங்களில் சமூக விவகாரங்களையும் உண்மைச் சம்பவங்களையும் நேரடியாகத் தொடும் பாணியில் படைப்புகளை உருவாக்கி வந்த இவர், தற்போது உருவாக்கி வரும் புதிய படமான ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


லஷ்மிகாந்தன் என்ற இளைஞர் கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகி வருகிறது. உண்மைச் சம்பவங்கள் கொண்ட கதைகளை சமகால வலிமையான திரைக்காட்சிகளுடன் உருமாறச் செய்வதில் தேர்ச்சி பெற்ற தயாள் பத்மநாபன், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு சமூக பிரச்சினையை திரையில் எடுத்து வருகிறார்.

சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் படக்குழுவினரும் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். தற்பொழுது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. உண்மை சம்பவங்களை கையாளும் படமாக இருப்பதால், கதையின் யதார்த்தம் கவனமாக நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன், இந்தப் படத்தில் நடிகராக இணைந்திருப்பது பெரும் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement