விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதலாவது இடத்தை தக்க வைத்து உள்ளது. குறுகிய நாட்களுக்குள் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
இந்த சீரியலில் அண்ணாமலைக்கு மனைவியாகவும் மீனாவுக்கு கொடுமையான மாமியாராகவும் விஜயா கேரக்டரில் நடித்து வருபவர் தான் அனிலா. இவர் நிஜ வாழ்க்கையிலேயே பரதநாட்டிய கலைஞராக காணப்படுகின்றார்.
d_i_a
இவர் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பதினால் சீரியல் சார்ந்த அப்டேட்டுகளையும் தனது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த அப்டேட்டுகளையும் பகிர்ந்து வருகின்றார். இவர் வில்லியாக பார்க்கப்பட்ட போதும் பலருக்கும் பிடித்த நடிகையாக காணப்படுகின்றார்.
இந்த நிலையில், நடிகை அனிலா 29 வருட திருமண வாழ்க்கையை பூர்த்தி செய்துள்ளார். இதனை தனது கணவருடன் கொண்டாடியுள்ளார்.
மேலும் இது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!