விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களை கவர்ந்து தற்பொழுது நிறைவடைந்து காணப்படுவதே பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர் பங்குபற்றி இருந்தனர். பிக்பாஸ் நிறைவடைந்த பின்னர் அனைத்து போட்டியாளர்களும் நேர்காணலில் கலந்து வருகின்றனர். அந்தவகையில் வர்ஷினி ஒரு பேட்டியில் கதைத்த வீடியோ தற்பொழுது டுவிட்டரில் வெளியாகி உள்ளது.
அதில் வர்ஷினி கூறுகையில், " நான் 100 சதவீதம் உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்துப் போனேன் அப்படித்தான் இருந்தேன் " எனக் கூறியிருந்தார்.அத்துடன் தனது உண்மை தோற்றத்தை காட்ட வேண்டும் என நினைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் நடுவர் அதில் நீங்கள் மிகவும் மாஸாக விளையாடுவீர்கள் என எதிர்பார்த்தேன் என்றார். அதற்கு வர்ஷினி " அந்த இடத்தில நாங்கள் இருக்கிறோம் என்றாலே ஜெயிசிட்டொம் என்று தான் அர்த்தம் மேலும் எவ்வளவு தூரம் வந்து மக்கள் மத்தியில் என்னுடைய பேர் நிலைத்ததே பெரிய விடயம் டைட்டில் வின் பண்ணனும் என்று எல்லாம் நான் பிக்பாஸிற்குள் வரவில்லை " என்று கூறியிருந்தார்.
எனினும் நான் 4 வாரங்கள் அங்கே இருப்பன் என எதிர்பார்த்திருந்தேன் ஆனால் 3 வாரங்களில் வெளியானது கொஞ்சம் கவலையாக உள்ளதாகவும் தெரிவித்தார் வர்ஷினி.
Listen News!