• Feb 22 2025

ஜெயில், குடும்பஸ்தன் பட கலை இயக்குநர் திடீர் மரணம்! தமிழ்த் திரையுலகினருக்கு பேரதிர்ச்சி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான குட்டி புலி, ஜெயில், அநீதி மற்றும் குடும்பஸ்தன் ஆகிய படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்தவர் தான் சுரேஷ் கல்லேரி. மேலும் திரை உலகில் Zero percent budget கலை இயக்குனர் என்றால் அது சுரேஷ் கல்லேரி தான்.

இந்த நிலையில், கலை இயக்குநராகத் திகழ்ந்த சுரேஷ் கல்லேரி நேற்றைய தினம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தற்போது இவருடைய மரணத்தை அறிந்த பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றார்கள்.

d_i_a

அந்த வகையில், சுரேஷ் கல்லேரியின் மரணத்தை அறிந்த இயக்குனர் வசந்த் பாலன் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன்படி அவர் வெளியிட்ட பதிவில்,


என்னுடைய ஜெயில் மற்றும் அநீதி திரைப்படத்தின் கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி நேற்று மாரடைப்பால் காலமானார். என்னை அளவுக்கதிகமாக நேசிக்கிறவர். என்னுடன் பணிபுரிய அத்தனை ஆசைஆசையாக கைகோர்க்கும் கலை இயக்குநர். சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த குடும்பஸ்தன் திரைப்படத்தின் கலை இயக்குநர்.

அநீதி திரைப்படத்தில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரமான அந்த கலை நயமிக்க கதவு அவரின் கலைக்குச் சான்று. இந்த திரையுலகில் Zero budget ( 0% )கலை இயக்குநர் என்றால் சுரேஷ் கல்லேரி தான். மனம் கனந்து கிடக்கிறது. இன்று மாலை இறுதி சடங்கு ஏவிஎம் இடுகாட்டில் நடைபெற இருக்கிறது. நண்பர்கள் கலந்து கொள்ளவும். என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement