• Jan 19 2025

விஜய் டிவியில் 15 வருடங்கள் ஓடும் சீரியல்? ஆடிஷன் ஆரம்பமாகிவிட்டதாக தகவல்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

பொதுவாக ஒரு சீரியல் ஒரு வருடம் முதல் மூன்று வருடம் அல்லது நான்கு வருடம் அதிகபட்சம் 5 வருடங்கள் ஓடும் என்பது தெரிந்தது. ஆனால் விஜய் டிவியில் விரைவில் ஆரம்பமாக உள்ள ஒரு சீரியல் 15 வருடங்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹிந்தியில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் இந்த சீரியல் yeh rishta kya kehlata hai. நான்காவது தலைமுறை கதை தற்போது ஓடிக்கொண்டிக்கிறது என்பதும், இந்த சீரியல் ’உறவுகள் தொடர்கதை’ என்ற டைட்டிலில் விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டப்பிங் செய்து ஒளிபரப்பான நிலையில் அதன்பின் சில ஆண்டுகளில் முடிக்கப்பட்டது என்பது பலரும் அறிந்ததே.



இந்த நிலையில் தற்போது இந்த சீரியலை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த சீரியலுக்கான கேரக்டர்கள் ஆடிஷன் சமீபத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஹிந்தியில் எப்படி 15 வருடங்கள் இந்த சீரியல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறதோ அதேபோல தமிழிலும் தொடர்ச்சியாக இந்த சீரியல் 15 வருடங்கள் ஓட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

4000 எபிசோடுகளுக்கு மேல் ஹிந்தியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் தமிழில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பார்கள் என்றும் இதற்காக ஒரு பெரிய பட்ஜெட்டை விஜய் டிவி ஒதுக்க முன் வந்திருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement