• Jul 27 2024

படம் பார்த்ததை யாருக்கும் சொல்லாதீர்கள் இது என் வேண்டுகோள்! ரசிகர்களை குழப்பும் ஸ்டார் பட இயக்குனர்!

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

திரைப்படங்கள் வெளியாகுவதற்கு முன்னர் இயக்குனர்கள் , நடிகர்கள் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களை முன்வைப்பர் . அவ்வாறே சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் ஸ்டார் திரைப்பட இயக்குனர் சில வார்த்தைகள் கூறியுள்ளார்.


எலன் இயக்கத்தில் கவின் நடித்துவரும் திரைப்படம் ஸ்டார் ஆகும். டாடா திரைப்படத்தின் பின்பு கவினுக்கு அதிக ரசிகர்கள் உண்டாகியுள்ள நிலையில் இதனை தொடர்ந்து வெளியாக இருக்கும் இந்த ஸ்டார் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.


இந்த நிலையிலேயே இதன் இயக்குனர் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுகையில் “ஸ்டார் படம் நாளை முதல் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை எனது தந்தை ஸ்டில்ஸ் பாண்டியனுக்கு அர்ப்பணிக்கிறேன். ஒரு தாழ்மையான வேண்டுகோள்: நீங்கள் படம் பார்த்தபிறகு படத்தில் உள்ள சர்ப்ரைஸ்களை யாரும் வெளியிடாமல் இருங்கள். அனைவரும் நீங்கள் பெற்ற அந்த நல்ல அனுபவத்தை பெற வேண்டும் என எனக்குள் இருக்கும் கலைஞன் விரும்புகிறான்" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement