• Dec 21 2024

பிரியங்காவுக்கு ஜால்ரா அடிக்கும் விஜய் டிவி.. நடுத்தெருவுக்கு இத்தனை தொகுப்பாளினிகள் வந்துள்ளார்களா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த விஜே மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக  வெளியேறி உள்ளார். இதனால் பல சர்ச்சை கருத்துக்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளன.

விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி ஒளிபரப்பாகி வந்தது. இதில் புகழ், மணிமேகலை, குரேஷி, தங்கதுரை, சிவாங்கி, சுனிதா, மதுரை முத்து ஆகியோர் செய்யும் அலப்பறைகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதன் மூலம் இவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. இதுவரை நான்கு சீசன்களும் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.

குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதி  கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மணிமேகலை மற்றும் ரக்சன்  தொகுப்பாளராக காணப்படுகின்றார்கள். மேலும் விஜய் டிவியின் தொகுப்பாளினியான பிரியங்கா இந்த சீசனில் குக்காக களம் இறங்கி இருந்தார்.


தற்போது மணிமேகலை குக் வித் கோமாளி இருந்து விலக காரணம் தொகுப்பாளினி ஒருவர் தான் என்றும், அவர் தனது வேலையை சரிவர செய்ய விடாமல் இடையில் நுழைவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு வெறியேறி இருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் அந்த தொகுப்பாளினி பிரியங்கா தான் என அவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். மேலும் விஜய் டிவி இந்த வேலையை தான் எப்போதும் செய்கின்றது. பிக் பாஸ் வீட்டிலும் பிரியங்காவுக்கு தான் ஜால்ரா அடித்தது என்று படு மோசமாக விமர்சித்து வருகின்றார்கள்.

மேலும் விஜய் டிவியில் பல தொகுப்பாளினிகள் பிரியங்காவால் காணாமல் போய் உள்ளார்கள். அதில் மணிமேகலை போலவே அனிதா சம்பத், ஃபரினா, நக்ஷத்ரா ஜாக்குலின்,பவித்ரா போன்ற  பலர் இருக்கிறார்கள். இவர்கள் காணாமல் போனதற்கு பிரியங்கா தான் காரணம் என்றும், மணிமேகலை சொன்னது போல வாழ விடு என இணைய வாசிகள் பிரியங்காவை வறுத்தெடுத்து வருகின்றார்கள்.




 

Advertisement

Advertisement