• Jan 19 2025

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சிவதாண்டவமாடும் சரிபோதா சனிவாரம்! மொத்த கலெக்சன் எத்தனை கோடி தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான சரிபோதா சனிவாரம் (தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை) என்ற படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கைப் போடு போட்டு வருகின்றது.

இந்த படத்தில் வாரத்தில் ஏழு நாட்களில் சனிக்கிழமை மட்டுமே தேர்ந்தெடுத்து நாயகன் சண்டை போடுகின்றான். மற்ற நாள்களில் சாதாரணமாக ஒருவராகவே காணப்படுகின்றார். அதற்கான காரணம்  முட்டாள்தனமான அல்லது பிற்போக்கான ஒன்றாக இருந்தாலும் உணர்ச்சி மிக்கதாக  காணப்படுகின்றதாம்.

இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்திருந்தார்கள். அதிலும் எஸ்ஜே சூர்யா வழக்கம் போலவே மிரட்டி இருந்தாராம். தெலுங்கிலும் எஸ்ஜே சூர்யாவிற்கு தற்போது ரசிகர்கள் அதிகரித்துள்ளார்கள்.


இந்த படத்தில் பிரியங்கா மோகனுக்கு அழுத்தமான கேரக்டர் காணப்பட்டுள்ளதோடு அவர் நடிப்பிலும் அசத்தியுள்ளார். தமிழ், தெலுங்கில் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த படம் பான் இந்திய படமாக வெளியாகியுள

இந்த நிலையில், சரிபோதா சனிவாரம் திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதாவது இந்த திரைப்படம் மொத்தமாக 100 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி உள்ளன.



Advertisement

Advertisement