• Jan 18 2025

விஜய் என் ஆசைய கெடுத்துட்டாரு! விஜய் அரசியல் வருகை பற்றி நடிகர் கார்த்திக் உருக்கமான பேச்சு!

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் நாடு மட்டுமின்றி இந்திய அளவில் கோடி கோடியாக ரசிகர்களை சம்பாதித்து வைத்திருவர் நடிகர் விஜய் ஆவார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் இவர் சமீபத்தில் தமிழக வெற்றிகழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து உறுப்பினர்களையும் சேர்க்க ஆரம்பித்துள்ளார்.


இவர் அரசியலில் இறங்கியதை பல ரசிகர்கள் கொண்டாடினாலும் விஜய் தனது கடிதத்தில் இன்னும் இரண்டு திரைப்படங்களை மாத்திரம் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலக போவதாகவும் , முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் கூறியிருந்தார். இது பலரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது.


இந்த நிலையிலேயே கடந்த காலங்களில் முன்னணி நடிகராக இருந்த நவரச நாயகன் கார்த்திக் விஜயின் அரசியல் வருகை பற்றி சில வார்த்தைகள் கூறி உள்ளார். அவ்வாறு அவர் கூறுகையில் " தம்பி வரட்டும் நல்லா வரட்டும், சரியான வயதில் அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆனால் அவர் இன்னும் திரைப்படங்கள் பண்ண வேண்டும், சில விசயங்கள் திரையில் சொல்லும்போதுதான் பெரிய அளவில் போய் சேரும், இது ஒரு அண்ணாக எனது ஆசை" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement