விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று ‘ஜனநாயகன்’. தற்போதைய சூழலில், அரசியலில் களமிறங்கும் விஜயின் கடைசி படம் என கருதப்படுவதால், இந்த படம் வெளியாகும் வரை பெரும் எதிர்பார்ப்பு பரவியுள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளவர் எச். வினோத், அவர் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநராகவும், கதையின் வலிமையை நன்கு எடுத்துச் செல்லும் திறமையுடையவராகவும் பிரபலமானவர். விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் அரசியல் பின்னணி கொண்ட கதாபாத்திரங்களை மையமாக கொண்டிருக்கும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் விஜயுடன் இணைந்து, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத் ரவிச்சந்தர்.
படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. இது ஒரு பிரமாண்ட விழாவாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க, நடிகர் விஜய் சென்னை விமானத்திற்கு வந்து தற்பொழுது தனி விமானம் மூலம் மலேசியா புறப்பட்டுள்ளார். அவரது வருகை, ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Listen News!