• Jan 18 2025

திமுக கூட்டணிக்கு விஜய் மறைமுக ஆதரவா? ரசிகர்களுக்கு மட்டும் புரியும் வகையில் ஒரு வாழ்த்து செய்தி..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

2026 ஆம் ஆண்டு தேர்தலில் தான் போட்டி என்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியில்லை மற்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்று விஜய் தெளிவாக கூறிவிட்டாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில் மறைமுகமாக ஒரு வாழ்த்து செய்தியை விஜய் கூறி ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று உணர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் அவர் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த போது ’சமூகநீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்’ என்று தெரிவித்துள்ளார். உண்மையில் அன்றைய தினம் தமிழ் புத்தாண்டு தினம் என்ற நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு வாழ்த்து கூறாமல் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு மட்டும் அவர் வாழ்த்து கூறியதில் இருந்தே அவர் திமுக ஆதரவு கருத்தைதான் பதிவு செய்திருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

தனது ரசிகர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதைத்தான் மறைமுகமாக கூறி இருக்கிறாரா என்றும் ஒரு செய்தி பரவி வருகிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தனது ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மறைமுகமாக இந்த வாழ்த்து செய்தியை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இருப்பினும் வருங்காலத்தில் அவர் திமுகவை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற  நிலையில், திமுக வுக்கு அவர் எப்படி ஓட்டு போட சொல்வார் என்று இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை தெளிவாக விஜய் கூற வேண்டும் என்றும் அல்லது உங்கள் விருப்பப்படி ஓட்டு போட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விடலாம் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் அட்வைஸ் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement