• Jan 19 2025

விஜய் இதை செய்தால் நிச்சயம் முதல்வராகிவிடலாம்.. பிரபல பத்திரிகையாளர்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தமிழக முதல்வராகிவிடலாம் என்ற ஆசையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் விஜய்க்கு பிரபல பத்திரிகையாளர் ஒருவர் முக்கிய ஆலோசனை கூறியுள்ளார். இந்த ஆலோசனையை விஜய் பின்பற்றினால் நிச்சயம் முதல்வராகி விடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் திரை உலகை சேர்ந்த பலருக்கு தமிழக முதல்வர் நாற்காலி மேல் ஆசை இருக்கும் நிலையில் விஜய்க்கும் அந்த ஆசை வந்துவிட்டது. அதனால் தான் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் என்பதும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் விஜய் அரசியல் வருகை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு முக்கிய திராவிட கட்சிகளை மீறி விஜய்யால் அரசியல் செய்ய முடியாது, மேலும் தற்போது பாரதிய ஜனதா கட்சியும் படிப்படியாக வளர்ந்து வருகிறது, அந்த கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது , அதனால் இந்த மூன்று கட்சிகளை தாண்டி தமிழகத்தில் விஜய் ஆட்சியைப் பிடிப்பது என்பது நடக்காத காரியம் என்று கூறியுள்ளார்.



ஆனால் அதே நேரத்தில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது என்றும் புதுவை முதல்வர் பதவியை டார்கெட் செய்து விஜய் காய் நகர்த்தினால் நிச்சயம் புதுவை மாநில முதல்வராக அவரால் ஆக முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே விஜய் கட்சியின் முக்கிய பொறுப்பாளரான புஸ்ஸி ஆனந்த் புதுவை எம்எல்ஏவாக இருந்தவர் என்பதால் புதுவையில் விஜய்யின் அரசியல் கட்சி எளிதில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்றும் கூறியுள்ளார். இந்த ஆலோசனையை விஜய் பின்பற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement