• Jan 19 2025

கமல் போட்டியிடும் தொகுதியில் ரஜினியின் மருமகன் விசாகன்? திமுகவின் மாஸ் பிளான்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

திமுக கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதி கிடைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை தொகுதியில் தான் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அதே கோவை தொகுதியில் ரஜினிகாந்த் மருமகன் விசாகனை போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் கமல்ஹாசனுக்கு வேறு தொகுதி தான் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.



சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் கணவர் விசாகன் திமுக அமைச்சராக இருந்த பொன்முடியின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பாராளுமன்ற தேர்தலில் விசாகன் போட்டியிட திமுக தலைமையிடம் விசாகன் குடும்பத்தினர் சீட் கேட்டுள்ளதாகவும் அவருக்கு கிட்டத்தட்ட சீட் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பாஜக பலமாக உள்ள கோவை தொகுதியில் விசாகனை போட்டியிட வைத்தால் ரஜினி ரசிகர்கள் அவரை ஜெயிக்க வைத்து விடுவார்கள் என்ற கணக்கும் திமுகவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கோவை தொகுதியை குறிவைத்த கமல்ஹாசனுக்கு இது அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும் ஆனாலும் அவர் தென்சென்னையில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி மருமகன் விசாகன் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement