• Jul 01 2025

பிச்சைக்காரன் படம் always best.! மார்கன் வெற்றி மேடையில் மனம் திறந்து கதைத்த விஜய் ஆண்டனி

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பல திறமைகளை கையாளும் விஜய் ஆண்டனி, தற்போது அவரது புதிய திரைப்படமான "மார்கன்" மூலம் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். 


இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் நடைபெற்ற வெற்றிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, தனது திரைப்பட பயணம் மற்றும் ரசிகர்களிடம் கொண்ட காதலை பகிர்ந்திருந்தார்.

"மார்கன்" திரைப்படம் வாழ்க்கையில் இடம்பெறும் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். விஜய் ஆண்டனியின் இயல்பான நடிப்பு, அவரின் கதாபாத்திர தேர்வு, மற்றும் நவீன கதைக்களம் ஆகியவை இந்தப் படத்தை வலிமையாக முன்னேற்றியது.


இந்த வெற்றி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய் ஆண்டனிக்கே சிறப்பான தருணமாக அமைந்திருந்தது. அந்தவகையில் வெற்றிவிழா மேடையில் விஜய் ஆண்டனி,“ நான் இதுவரை நடித்த படங்கள் மட்டுமல்ல இனிமேல் நடிக்கப்போகும் படத்திலும் பிச்சைக்காரன் போன்ற ஒரு படம் இருக்க முடியாது.." என பிச்சைக்காரன் படம் குறித்து உருக்கமாக தெரிவித்திருந்தார். இவ்வாறு உணர்வுபூர்வமாக பேசிய விஜய் ஆண்டனியின் வார்த்தைகள், ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.  

Advertisement

Advertisement